தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 5ஜி சேவைக்கான உரிமம்?: ஒன்றிய அமைச்சரவைக்கு தகவல் தொடர்பு அமைச்சகம் பரிந்துரை..!!

டெல்லி: தகவல் தொடர்பு நிறுவனங்கள் அல்லாத பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 5ஜி வொய்-ஃபை, ஹாட்ஸ்பாட் சேவை வழங்கும் உரிமையை அளிக்க ஒன்றிய அமைச்சரவைக்கு ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. 5ஜி வொய்-ஃபை, ஹாட்ஸ்பாட் சேவை வழங்கும் உரிமையை கூகுள், அமேஸான், டிசிஎஸ், சிஸ்கோ போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்பது ஒன்றிய அமைச்சகத்தின் பரிந்துரையாகும். இந்த சேவைக்கான உரிமம் வழங்குவதன் மூலம் நாட்டில் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பெருகும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதேநேரம் 5ஜி சேவையை வழங்க காத்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடாபோன் போன்ற நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை அமைச்சரவை விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்போன் சேவை வழங்காத பிற நிறுவனங்கள், பிற நாடுகளில் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு 5ஜி சேவை வழங்கல் உரிமம் அளிக்கப்பட்டால் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், துறைமுகங்கள் மற்றும் ஹோட்டல்களில் 5ஜி வொய்-ஃபை ஹாட்ஸ்பாட் சேவை எளிதில் கிடைக்கும்.

Related Stories: