×

கும்பக்கரை அருவியில் நீராட அனுமதி அளித்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் பொதுமக்கள் நீராட வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி பிரசித்தி பெற்றது. இங்கு வந்து குளித்து மகிழ்வதை சுற்றுலா பயணிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் நீராட யாரையும் வனத்துறை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை முதல் அருவியில் சீராக தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வெட்டக்காணல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக அவ்வப்போது மழை கொட்டியதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வனத்துறை குளிக்கத்தடை விதித்திருந்தது. இந்நிலையில் நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் நீராட வன அதிகாரி டேவிட்ராஜ் அனுமதி அளித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.     


Tags : Kumbakkara , Kumbakara Falls, Swim, Permission, Tourist, Pleasure
× RELATED கும்பக்கரை அருவியில் குளிக்க அக்.8ல் கட்டணம் கிடையாது