×

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த நடவடிக்கை!: புனே டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்..முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது..!!

சென்னை: தமிழ்நாட்டில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றார் போல் பயிற்சிகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். அதன்படி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகளானது ஒவ்வொரு துறை சார்ந்து கொடுக்கப்படுகிறது.

அந்தவகையில் இன்றைய தினம் புதிய ஒப்பந்தமானது கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும் புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொழில் நிறுவனங்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இணைந்து ரூ.2,877 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு நவீன தொழில்நுட்ப மையமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் ஒவ்வொரு துறை வாரியாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசிக்கிறார்.

Tags : Government ,Tamil Nadu ,Pune ,Tata Technologies , Government Vocational Training Center, Quality, Contract, Chief
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...