×

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்த ரஷ்யா: சவூதி அரேபியாவை பின்னுக்குத்தள்ளி 2-ம் இடத்தை பிடித்தது..!!

மாஸ்கோ: இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியாவை பின்னுக்குத்தள்ளி ரஷ்யா 2-வது இடத்தை பிடித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த பட்டியலில் இந்தியாவும் சேர வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் இருநாட்டு போர் விவகாரத்தில் நடுநிலை வகிக்கும் இந்தியா போரை கைவிட ரஷ்யாவும், உக்ரைனும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதனிடையே ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளையும் தாண்டி ரஷ்யா தனது பொருளாதார நிலைப்பாட்டில் வலுவாக உள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கச்சா எண்ணெயை தனது நட்பு நாடுகளுக்கு ரஷ்யா விநியோகம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா அதிகரித்துள்ளது. சந்தை மதிப்பில் இருந்து கச்சா எண்ணெய் பேரலுக்கு 30 அமெரிக்கன் டாலர்கள் தள்ளுபடி விலையில், இந்தியாவிற்கு ரஷ்யா விநியோகம் செய்து வருகிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில், ஈராக் முதலிடத்திலும், சவூதி அரேபியா 2-ம் இடத்திலும் இருந்துவந்தது. தற்போது சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி ரஷ்யா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.   


Tags : Russia ,India ,Saudi Arabia , India, Crude Oil, Exports, Russia, Saudi Arabia, 2nd place
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!