×

குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க புதிய திட்டம்’ கள்ளக்காதலர்களை ஆபாச படம் எடுத்த ஆசாமி: போலீஸ் போல் நடித்து மிரட்டல்: 50 பவுன் நகை, பணம் பறிப்பு

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே முடிச்சூர் சர்வீஸ் சாலையில் ஒரு டிப்டாப் ஆசாமி, போலீஸ் என கூறி பணம், நகைகளை வாங்கி செல்வதாக உளவுத்துறை மூலமாக தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் பீர்க்கன்காரணை இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு டிப்டாப் ஆசாமி கள்ளக்காதல் ஜோடியை மிரட்டுவது தெரியவந்தது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவராமன் (39) என்பதும், கடந்த 10 வருடங்களாக செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆசாமி என்பது தெரியவந்தது. மேலும், அந்த ஆசாமி கடந்த ஏப்ரல் 13ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரிந்தது. சிவராமனின் செல்போன் நம்பரை டிரேஸ் செய்தபோது பாண்டிச்சேரியில் இருப்பதாக தெரிய வந்தது. உடனே அங்கு விரைந்தனர். 2 நாட்களாக தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் செல்போன் நம்பரை டிரேஸ் செய்தபோது பெங்களூரில் இருப்பதாக தெரிந்தது. அங்கு சென்று தேடியபோதும் சிக்கவில்லை. தனிப்படை போலீசார் சென்னைக்கு வந்துவிட்டனர். நன்மங்கலத்தில் தனது மாமியார் வீட்டில் பதுங்கியிருந்த  சிவராமன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை  தொடர்ந்து  அவர் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.  விசாரணையில், தாம்பரம் அடுத்த வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையோரத்தில் இளம் காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகளை மிரட்டி பணம் மற்றும் நகை பறித்துள்ளது  விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், போலீசார் சிவராமனிடம் நடத்திய விசாரணையில், முடிச்சூர் சர்வீஸ் சாலையில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி காரில் இருந்த கள்ளக்காதல் ஜோடியினர் நெருக்கமாக இருந்தனர். அவர்களை வீடியோ எடுத்தேன். பின்னர் கார் ஓட்டி வந்த கள்ளக்காதலனிடம் ‘வழக்கம் போல நான் போலீஸ்’ என கூறி, கீழே இறக்கி ஒரு பைக்கில் ஏற்றி கொண்டு 2 கிமீ தூரம் அழைத்து சென்றேன். அங்க, ‘உங்கள் வீட்டில் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடு’ என மிரட்டி, அந்த வீடியோவை காட்டி ரூ5 ஆயிரம் பறித்தேன். பின்னர், அவரை அங்கேயே நிற்க வைத்து விட்டு, மீண்டும் காரின் அருகே வந்து அவரது கள்ளக்காதலியை மிரட்டி 11 பவுன் நகைகளையும் பறித்துள்ளேன். இதே போன்று மே 19ம் தேதி வண்டலூர் பகுதியில் காரில் நெருக்கமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியிடம் நகைகளை பறித்தது மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் உட்பட 5 இடங்களில் சுமார் 50 பவுன் நகைகளை பறித்ததும் பற்றி தெரியவந்தது. சிவராமனும் அவரது கூட்டாளிகளும், 2012ம் ஆண்டு முதல் கடலூரில் இருந்து சென்னைக்கு பைக்கில் வந்து சென்னை உட்பட பல இடங்களில் செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு மீண்டும் கடலூருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறினார். அந்த வகையில், சென்னை உட்பட மாமல்லபுரம், தேவனாம்பட்டினம், நெய்வேலி கள்ளக்குறிச்சி என பல்வேறு காவல் நிலையங்களில் செயின் பறிப்பு மட்டுமே சுமார் 41 வழக்குகள் நிலுவையில் உள்ளது. பறித்த நகைகளை தாம்பரம் மற்றும் கடலூரில் உள்ள மார்வாடி கடையில் விற்று, அதில் வரும் பணத்தில் பாண்டிச்சேரி, பெங்களூர் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து மது அருந்தி பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.இதையடுத்து, சிவராமனிடம் ஒரு பைக், 25 பவுன் தங்க நகைகள் மற்றும்  ரூ5.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Asami , ‘New plan to make money in a short time’ Asami who filmed fake lovers: Acting like a policeman and threatening: 50 pound jewelery, money laundering
× RELATED அபுதாபியில் இருந்து சென்னை வந்த...