அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் மெகா தடுப்பூசி முகாம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 78 மையங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் நடந்தன. சீதாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் தேசு, செயலாளர் காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருமுக்காடு, பெரும்பேர்கண்டிகை, கடமலை புத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம்களை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

Related Stories: