×

வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டையில் ஒரே நாளில் 6 கோயில்களில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டையில் ஒரே நாளில் 6 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்று சென்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அய்யன்பேட்டை வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திஅம்மன், ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ செக்கடி விநாயகர், ஸ்ரீ கண்ணப்ப விநாயகர், சுயம்பு ஸ்ரீ ரேணுகாம்பாள், ஸ்ரீ கன்னியம்மன் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேக விழா நேற்று ஒரே நாளில் கோலாகலமாக நடைபெற்றது.  முன்னதாக, யாகசாலை அமைத்து நாள்தோறும் சிவாச்சாரியார்கள் சாந்தி ஹோமம், விசேஷ திரவிய ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்களில் கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு நேற்று காலை சிவாச்சாரியார்கள் கோபுரங்களிலும் கோயில்களில் உள்ள மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றினர்.

  அப்போது, கோயிலை சுற்றி இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அரோகரா கோஷம் எழுப்பி தங்களின் வேண்டுதலையும், நேர்த்தி கடனையும் தீப ஆராதனைகள் காண்பித்து நிறைவேற்றி கொண்டனர். இதனைத்தொடர்ந்து,  அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியின்போது ஆங்காங்கே அன்னதானம்  வழங்கப்பட்டன. அய்யம்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுந்தர் எம்எல்ஏ  எம்பி செல்வம் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் துணை தலைவர்  சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை காண அய்யம்பேட்டை, திம்மராஜாம்பேட்டை, முத்தியால்பேட்டை, கருக்குப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கல்லமாநகரில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதியில், மிகவும் பிரசித்தி பெற்ற முக்கியமான இக்கோயில், சில ஆண்டுகளாக புனரமைக்கும் பணி நடந்து வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இப்பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதற்கு பிறகு மீண்டும் பணி தொடங்கி நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக பணி தொடங்கியது. 4ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததும் நேற்று காலை புனித நீர் எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், தீபாராதனை காட்டப்பட்டது. புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமைந்தங்கருணை கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயில் மறுபுணரமைக்கப்பட்டு அதன் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இந்த, விழாவையொட்டி கடந்த வியாழக்கிழமை பிடாரி எட்டியம்மன்  சக்தி கரகம்  எடுத்து வருதலும், இரவு எட்டி அம்மன் வீதி உலாவும் நடந்தது. வெள்ளிக்கிழமை மாரியம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழாவும்  இரவு அம்மன் வீதி உலாவும் நடந்தன.  திரவுபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவையொட்டி சனிக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை 3 நாட்கள் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. இதில், 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பு யாக பூஜைகள் நடத்தினார். இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை காலை  விஸ்வரூப தரிசனமும், யாக பூஜைகளும் திருவாராதனமும்.   ஹோமமும்  மகா பூர்ணாஹூதியும், மகா தீபாராதனையும் நடந்தன.  தொடர்ந்தது காலை 10 மணிக்கு திரவுபதி அம்மன் ஆலய விமான கோபுரத்திற்கும் தொடர்ந்து மூலவருக்கும் திரவுபதி அம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தன.

Tags : Kumbaphishekam ,Ayyyampet ,Wallajabad , Kumbabhishekam in 6 temples in one day at Ayyampettai ,Darshan by a large number of devotees
× RELATED லாரி மோதி காவலாளி பலி