×

ஆவடியில் 3 நாட்கள் நடந்த உணவு திருவிழா நிறைவு: ஏராளமானோர் குவிந்தனர்

ஆவடி: ஆவடியில் 3 நாட்கள் நடந்த உணவு திருவிழா நிறைவு பெற்றது. கடைசி நாளில் ஏராளமானோர் குவிந்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவடியில் 3 நாள் உணவு திருவிழா நடந்தது. இதில் 130 அரங்குகள் அமைக்கப்பட்டு வெளிநாட்டு உணவகங்கள் மட்டுமின்றி இயற்கை உணவுகள், துரித உணவுகள், சைவம், அசைவம் என அனைத்து வகையான உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் குளிர்பானம், ஐஸ்கிரீம் என வெவ்வேறு பிரிவுகளில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான மக்கள், தங்களுக்கு பிரியமான உணவுகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இந்த உணவு திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் அறுஞ்சுவை அரசி, இளவரசி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பட்டங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பால்வளைத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அவர்கள் ஒவ்வொரு அரங்குகளாக சென்று மக்களோடு மக்களாக உணவுகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். அப்போது அமைச்சருடன் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆர்வமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

Tags : food festival ,Avadi , Closing of the 3-day food festival in Avadi: Large crowds gathered
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!