×

ஆந்திராவிலிருந்து கும்மிடிப்பூண்டி பகுதிக்கு டன் கணக்கில் மணல் கடத்தல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி அதனை ஒட்டியுள்ள பொன்னேரி, சோழவரம், எல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் தேவைகளுக்காக ஒவ்வொரு குடும்பம், குடும்பமாக 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசு வழங்கும் தொகுப்பு வீடு கட்டுவதற்காக மணல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கட்டுமான பொருட்கள் விலை ஏற்றமும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் அரசு சார்பாக மணலுக்கு பதிலாக எம்.சாண்ட் மணலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், வசதிபடைத்த வீட்டு உரிமையாளர்கள் ஆகியோர் மணல் கொள்ளையர்கள் மூலம் ஆந்திராவில் இருந்து முக்கிய புள்ளிகளுடன் கைகோர்த்துக்கண்டு தமிழக - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் வழியாக லாரிகளில் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து மணல் கடத்துகின்றனர். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, எளாவூர், தச்சூர் கூட்டு சாலை ஆகிய பகுதியில் வசதிபடைத்த கட்டிட உரிமையாளர்களுக்கு மணல் கொள்ளையர்கள் மூலம் மணல் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான பணம் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மணல் கடத்தல் கும்பலை தனிப்படை அமைத்து தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.



Tags : Andhra Pradesh ,Gummidipoondi , Tons of sand smuggling from Andhra Pradesh to Gummidipoondi area
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி