×

கூரம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீதேவி பொன்னியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கூரம்பாக்கம் கிராமத்தில் கிராம தேவதையான ஸ்ரீதேவி பொன்னியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.பின்னர் பிற்பகல் 1 மணிக்கு மிருத் சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், 12ம் தேதி கோபூஜை, சுமங்கலி பூஜை, பாலபூஜை, மாலையில் கணபதி மகாலட்சுமி பூஜை, வேதபாராயணம் நடைபெற்றுது. இந்நிலையில், நேற்று முன்தினம் லட்சுமி கணபதி ஹோமம், நாடி சந்தானம், 9 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து, 9.25 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6 மணியளவில் பொன்னியம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.



Tags : Sridevi Ponniyamman Temple Kumbabhisekha Festival ,Kurambakkam Village , Sridevi Ponniyamman Temple Kumbabhisekha Festival at Kurambakkam Village
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...