×

உலக வர்த்தக அமைப்பின் மீனவர் மானியத்தை நிறுத்தும் ஒப்பந்தத்துக்கு இந்தியா எதிர்ப்பு: ஜெனிவாவில் போராட்டம்

ஜெனீவா: இந்திய மீனவர்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின்படி நிறுத்துவது அவர்களது வாழ்வாதாரம், குடும்பங்களை பாதிக்கும் என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.ஒன்றிய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் 2016ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 9 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 30.77 லட்சம் மீனவர்களின் குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளன. இந்நிலையில், ஜெனிவாவில் நடக்கும் உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை நிறுத்த பரிந்துரைக்கப்பட்டது.இம்மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ``உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை நிறுத்துவது அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும், குடும்பங்களை வறுமையில் தள்ளும். எனவே, வளர்ந்த நாடுகளின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடாது,’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.இதனிடையே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா, கோவா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 34 மீனவர்கள் ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக மாநாட்டின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மீனவர்களின் மக்கள்தொகை 112 நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

Tags : India ,WTO ,Geneva , India opposes WTO suspension of fishery subsidy: Struggle in Geneva
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...