பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துங்கள்: ஒன்றிய சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அவர்களுக்கு விரைந்து கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்’ என்று ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி இருக்கிறார். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதார துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா நேற்று வீடியோகான்பரன்ஸ் மூலமாக கொரோனா குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் மன்சுக்  மாண்டவியா கூறியதாவது: நாட்டில் கொரோனா தொற்றின் புதிய மாறுபாடுகளை அடையாளம் காண்பதற்கு தொற்று குறித்த கண்காணிப்பை தொடரவும் வலுப்படுத்துவதும் அவசியமாகும். 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை கண்டறியும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: