புதுச்சேரி சட்டசபை எம்எல்ஏ அறையில் தீ

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் எம்எல்ஏ அறையில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்தது. புதுச்சேரி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா அலுவலகம் உள்ளது. இதை ஒட்டி உப்பளம் தொகுதி திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடியின் அறை உள்ளது. இவரது அறையில் உள்ள ஏசியின் அவுட்டோர் யூனிட்டில் நேற்று மதியம் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்து புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் வந்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அங்கிருந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள், சட்டசபை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்து தனது அறையை கென்னடி எம்எல்ஏ பார்வையிட்டு ஊழியர்களிடம் தீ விபத்து குறித்து கேட்டறிந்தார்.

Related Stories: