கோத்தகிரி அருகே 2 குட்டிகளை முதுகில் சுமந்து சாலையை கடந்த தாய் கரடி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிமுள்ளன. இந்த பகுதியில் கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது உலா வருகின்றன. இந்நிலையில் தனது 2 குட்டிகளை முதுகில் சுமந்தவாறு தாய் கரடி, தோயிலைத்தோட்டத்தில் உலா வந்தது. இதனை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். மனிதர்கள் பார்ப்பதை அறிந்த கரடி குட்டிகளுடன் தோட்டத்தில் பதுங்கியது. சிறிது நேரத்துக்கு பின்னர் 2 குட்டிகளை முதுகில் சுமந்தவாறு அங்குள்ள சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகளை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Related Stories: