×

தமிழக ஆளுநர் பேச்சுக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தருமத்தை உயர்த்திப் பிடித்து பேசியுள்ளார். ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என்று பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மனித சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரங்களின் கோட்பாட்டை தூக்கிப்பிடித்து பெருமை பொங்க பேசி உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் யார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியாவை வழி நடத்துவது அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல. ஆளுநர் ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பிறவி பேதத்தை கற்பிக்கும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசும் ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். உடனடியாக குடியரசு தலைவர் தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vaiko ,Governor of Tamil Nadu , Vaiko condemns the speech of the Governor of Tamil Nadu
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...