வத்திராயிருப்பில் நிரந்தர அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் நிரந்தர அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் நடந்து வருகிறது. வத்திராயிருப்பில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்டில் இயங்கி வருகிறது. இதனால் ஒரு சில பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வராமல் சென்று விடுகின்றன.

பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிலையில், அங்கு கொள்முதல் நிலையம் செயல்பட முடியாது. இதனால் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே நிரந்தர கொள்முதல் நிலையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: