கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கருப்பு கொடி: தங்க கடத்தலுக்கு பொறுப்பேற்று பினராயி பதவி விலக வலியுறுத்தல்

கண்ணூர்: தங்க கடத்தலில் தொர்புள்ளதாக எழுந்துள்ள புகாருக்கு பொறுப்பேற்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்கட்சினர் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக சொப்பன சுரேஷ் குற்றம் சாட்டியது முதல் கேரளா முதலமைச்சருக்கு எதிரான போராட்டங்களை அம்மாநில எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சினர் முதலமைச்சர் பினராயி விஜயன் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று கோட்டையம், மலப்புரம் ஆகிய இடங்களில் பினராயி விஜயனுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்ணூர் சென்ற பினராயி விஜயனுக்கு எதிர்க்கட்சியினர் கருப்பு கொடி காட்டியதால் பரபரப்பு நிலவியது. எதிர்கட்சியினரின் கருப்பு கொடி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா முதலமைச்சர் பங்கேற்கும் விழாக்களுக்கு பாதுகாப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. பினராயி விஜயன் செல்லும் சாலைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

Related Stories: