×

தனியார் பள்ளி பேருந்துகளில் கேமரா பொருத்த அறிவுறுத்தல்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

பெரம்பலூர்: இலவச பேருந்து பயணத்துக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் வரை மாணவ, மாணவிகள் பழைய பயண அட்டைகளையே பயன்படுத்தி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் கொளக்காநத்தத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அளித்த பேட்டி: கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு அரசு பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

தமிழக முதவல்வர் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரியில் படிக்கின்றபோது மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். அந்த சிறப்புத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கேமரா பொருத்த வேண்டும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அரசு சார்பாக அறிவிப்பு விடப்பட்டிருக்கிறது. அதை முன்னிட்டு அனைத்து தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமும் பள்ளி பேருந்துகளில் கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டையினை ஸ்மார்ட் கார்டாக வழங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு அதற்கான நடவடிக்கை துவங்கிருக்கிறது. எனவே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் வரை ஏற்கனவே பயன்படுத்திய இலவச பேருந்து பயண அட்டைகளையே பயன்படுத்தி மாணவ, மாணவிகள் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Sivasankar , Instruction to fit camera in private school buses: Minister Sivasankar Information
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...