கோஹ்லி, ஸ்மித் டெஸ்ட் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்

நாட்டிங்காம்: இங்கிலாந்து-நியூசிலாந்துஅணிகள் இடையே 2வது டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்துவருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து  553 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. மிட்செல் 190, டாம் ப்ளன்டெல் 106 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 2வது நாள் முடிவில் ஒருவிக்கெட் இழப்பிற்கு 91 ரன் எடுத்திருந்தது. 3வது நாளான நேற்று அலெக்ஸ் லீஸ் 67ரன்னில் வெளியேற ஒல்லி போப் 146 ரன் எடுத்து அவுட் ஆனார். பேர்ஸ்ட்டோவ் 8, பென் ஸ்டோக்ஸ் 46 ரன் அடித்தனர். நேற்றைய 3ம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 473ரன் எடுத்திருந்தது.

டெஸ்ட் அரங்கில் 27வது சதத்தை விளாசிய ஜோ ரூட் 163, பென் போக்ஸ் 24 ரன்னில் களத்தில் உள்ளனர். ஸ்மித், விராட்கோஹ்லியின் 27 டெஸ்ட் சதம் சாதனையை ரூட் சமன் செய்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து இதுவரை அவர் 10 டெஸ்ட் சதம் அடித்துள்ளார். இந்த காலகட்டத்தில் ஸ்மித் 1, வில்லியம்சன் 3 சதம் அடித்துள்ளனர். கோஹ்லி ஒரு சதம்கூட அடிக்கவில்லை.

Related Stories: