3வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி: வெஸ்ட்இண்டீஸ் ஒயிட்வாஷ்

முல்தான்: பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி முல்தானில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன் எடுத்தது. அதிகபட்சமாக  சதாப்கான்  86 (78பந்து), இமாம் உல்ஹக் 62, ஃபகார் ஜமான் 35 ரன் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் 37.2 ஓவரில் 216 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 53 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

வெ.இண்டீஸ் பேட்டிங்கில் அகேல் ஹொசைன் 60(37பந்து), கீசி கார்டி 33 ரன் அடித்தனர். பாகிஸ்தான் பவுலிங்கில் சதாப்கான் 4 விக்கெட் வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் தொடர்நாயகன் விருது பெற்றார். ஏற்கனவே முதல் 2 போட்டியிலும் வெற்றிபெற்றிருந்த பாகிஸ்தான் 3-0 என தொடரை கைப்பற்றி வெ.இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.

Related Stories: