மணலூர் கண்மாயில் நந்தி சிலை கண்டெடுப்பு; மண்ணுக்கடியில் மிகப்பெரிய கட்டுமானம் கிடைக்க வாய்ப்பு

மதுரை: பண்டைய மதுரை நகரில் முழுமையான வரலாறு சான்றுதலை கண்டறிய மானா மதுரை அருகே மணலூர் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை நகரில் நாகரிகத்தை தேடியே கடந்த 6 மற்றும் 7-ம் கட்ட பணிகள் கீழடி அருகே மணலூரில் நடைபெற்றனர். அங்கே தோண்ட பட்ட குழிகளில் செங்கல் கட்டுமான உள்ள சுவர்கள், பாறைகள், உரை கிணறுகள் கிடைத்தது. 8-ம் கட்ட அகழாய்வில் மணலூர் சேர்க்கப்பட்ட போதிலும் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

மணலூர் கண்மாயில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டால் மதுரை பற்றி மேலும் பல அறிய சான்றுதல் கிடைக்கும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். மணலூர் கண்மாயில் சவுடுமண் அள்ளும்போது  நந்தி சிலையும் வெளிபட்டது. முறையாக தோண்டினால் இதன் அடியில் மிகப்பெரிய கட்டுமானம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.   

Related Stories: