டெல்லி: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி ஆலோசனையில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். கொரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசி பணியை விரைவுபடுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை வழங்கி வருகிறது.