×

கொடுங்கையூர் விசாரணை கைதி ராஜசேகர் மரண விவகாரத்தில் மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை

சென்னை: சென்னை கொடுங்கையூரில் போலீஸ் விசாரணைக்கு சென்ற நபர் உயிரிழந்தது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். நேற்று போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ரெட்ஹில்ஸ் ராஜசேகர் (33) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார்.

விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதைனையடுத்து, உயிரிழந்த ராஜசேகரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், ராஜசேகரைக் கைது செய்தவர்கள், இரவில் காவல் நிலையத்தில் அவரை தங்க வைத்தவர்கள் எனப் பல கோணங்களில் கொடுங்கையூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

அதனை தொடர்ந்து, கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், முதன்மை காவலர்களான ஜெயசேகரன், மணிவண்ணன் முதல்நிலைக் காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனிடையே விசாரணைக் கைதி ராஜசேகர் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது கெல்லீஸ் சிறார் நீதிமன்ற 12-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார். காவல்நிலையத்தில் ராஜசேகரிடம் விசாரணை நடத்திய காவலர்களிடமும் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.



Tags : Kodungayur ,Rajasekar , Kodungaiyur Magistrate's inquiry into the death of prisoner Rajasekar
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு