புதிய கல்வியாண்டு கல்வியையும், எல்லையில்லா அறிவையும் பெறும் ஆண்டாக அமையட்டும்! : அன்புமணி வாழ்த்து!!

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், புதிய கல்வியாண்டு கல்வியையும், எல்லையில்லா அறிவையும் பெறும் ஆண்டாக அமையட்டும் என்று அன்புமணி வாழ்த்து கூறியுள்ளார். ஒருமாத கால கோடை  விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.  பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் தூய்மைப்படுத்தி, கிருமி  நாசினி தெளித்து மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் வகுப்பறைகள் உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் ஐந்து நாட்கள் மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புதிய வகுப்புகளுக்கு மாணவச் செல்வங்கள் திரும்புகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் புதிய 2023 ஆவது கல்வியாண்டு சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கின்றன. இடைப்பட்ட ஆண்டுகளில் கொரோனா பரவலால் மாணவர்கள் இழந்தவை ஏராளம். அவை கடந்த காலங்களாகட்டும். புதிய கல்வியாண்டு கல்வியையும், எல்லையில்லா அறிவையும் பெறும் ஆண்டாக அமையட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: