×

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் குருபூஜை

திருப்போரூர்: திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் குருபூஜை நேற்று நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலை உருவாக்கிய சிதம்பர சுவாமிகள் கண்ணகப்பட்டு கிராமத்தில் மடத்தை நிறுவி அங்கிருந்தபடி திருப்போரூர் கோயிலை நிர்வகித்து வந்தார். அவர் மறைந்த வைகாசி விசாக நாளில் ஆண்டு தோறும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிதம்பர சுவாமிகளின் 363ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று கண்ணகப்பட்டு சிதம்பர சுவாமிகள் மடத்தில் நடந்தது.

அவர் தங்கியிருந்த ஒடுக்க அறையில் உள்ள அவர் பயன்படுத்திய பாதுகை, கமண்டலம் மற்றும் பூஜை பொருட்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மடத்தில் உள்ள சிதம்பர சுவாமிகள் சன்னதியில் அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சிதம்பர சுவாமியை வணங்கி சென்றனர். கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் வெற்றிவேல் முருகன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags : Thiruporur Chidambaram ,Swamis Gurupuja , Thiruporur, Chidambara Swami, Gurupuja
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...