×

100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளுக்கும் அனுமதிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி: மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் விவசாய பணிகளுக்கும் அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒன்றிய அரசு சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு 100 நாள் பணி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு கிராமத்தில் உள்ள நீர்நிலைகளான ஏரி, குளம், நீர்வரத்து கால்வாய், பாசன கால்வாய் தூர்வாருதல், சாலையோர புதர்கள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் செய்து வருகிறது.

இந்த பணிக்கு வேலை அட்டை பெற்றவர்களுக்கு அரசு சலுகைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நாளடைவில் அனைவரும் வசதி படைத்தவர்களும் அரசுப் பணியில் ஓய்வுபெற்ற குடும்பத்தினரும் அரசுப்பணியில் இருக்கும் குடும்பத்தினருக்கும் இந்த வேலை அட்டை வழங்கப்பட்டது. இவர்கள் வசதி படைத்தவர்கள் பலர் இருப்பததாக கூறப்படுகிறது. பணிக்கு செல்பவர்கள் அங்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பணி செய்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து மரத்தடியில் ஓய்வு எடுக்கின்றனர். இதையடுத்து பாஜ அரசு இந்த திட்டத்தில் சாலை அமைத்தல், கல்வெட்டு, சிமென்ட் கால்வாய் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த திட்டத்தில் சேர்த்தது. ஆனால்  இந்த திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்த கட்சியினரே பணியில் சேர்ந்த அந்த பணியையும் தொய்வாக செய்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது பல்வேறு கிராமங்களில் நடைபெறும் விவசாய பணிகளான நெல், கரும்பு, வேர்க்கடலை, பூப்பறித்தல் உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு உரிய  ஆட்கள் கிடைப்பதில்லை.

சிறு குறு விவசாயிகள் வேலைக்கு உரிய ஆட்கள் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் பல இடங்களில் தண்ணீர் இருந்தும் விவசாய கூலி ஆட்கள் கிடைக்காததால் நிலங்களை தரிசாகவே விட்டு வருகின்றனர்.
இதனால் விவசாயிகளும் கடும் அவதிப்படுகின்றனர். எனவே தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் விவசாய பணிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : 100 day work plan, agricultural work, farmers demand
× RELATED புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 395...