×

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் இருளர் காலனிக்கு சாலை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் குமாராஜிபேட்டை, மோட்டூர் அருகே மலைப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்கள் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் இருளர் காலனிக்கு சென்றுவர அங்குள்ள ஓடைக்கு அருகில் தார்சாலையை பயன்படுத்தி வந்தனர். ஓராண்டுக்கு முன்பு பெய்த கன மழைக்கு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தார் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருளர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஆய்வு செய்ய எஸ்.சந்திரன் எம்எல்ஏ சென்றார். அப்போது, அப்பகுதியில் சாலை வசதியின்றி இருளர்கள் பள்ளிக்கு செல்லவும், ரேஷன் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வர பெண்கள் அவதிப்படுவதை பார்த்தார்.

இதனால் உடனடியாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மழைக்கு சாலை சேதமாவதை தடுக்கும் வகையில் 25 லட்சம் மதிப்பீட்டில் ஓடைக்கரை தடுப்புகள் அமைத்து வெள்ளம் ஏற்பாடாலும், சாலை துண்டிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி, பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா ஆகியோர் பங்கேற்றனர். சாலை அமைக்க வருகை தந்த எம்எல்ஏ மற்றும் திமுகவினருக்கு இருளர்கள் அவர்களது குடும்பத்துடன் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

Tags : MLA ,Road to Darkness Colony , Pallipattu Union, Dark Colony, Road, MLA
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...