×

ஆவடி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.மு.நாசர் பங்கேற்பு

ஆவடி: ஆவடி, ஊத்துக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றன. இந்நிலையில், ஆவடி மார்க்கெட் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், `தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, அந்தந்த மாவட்டத்தில் 1 லட்சம் மையங்களில் மருத்துவ பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள் மற்றும் நாள்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் முதல் தவணையாக 17,69,420 நபர்களும் (93.7%), இரண்டாம் தவணையாக 14,44,163 நபர்களுக்கும் (76.5%) என மொத்தமாக 32,13,583 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ளவர்களுக்கு முகாம்கள் மூலமாக இனி வரும் நாட்களில் கொரோனா தடுப்பு ஊசிகள் செலுத்தப்படும்’ என கூறினார்.

இதில் மருத்துவ சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆவடி ஆணையர் தர்பாகராஜ் டாக்டர் எம்.ஜெகதீஸ் சந்திரபோஸ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நகர பொறுப்பாளர் ராஜேந்திரன், பேபி.சேகர் ஜி.நாராயண பிரசாத் பொன்.விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் மற்றும் கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களில் நேற்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று முகாமை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பொதுசுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட சுகாதார நலத்துறை இயக்குனர் ஜவகர், பெரியபாளையம் மருத்துவர் தீபக், மேற்பார்வையாளர் ஜெகந்நாதலு, எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி, ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி முனுசாமி, கன்னிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முரளி, தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துளசிராமன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோடுவெளி எம்.குமார், ஜி.பாஸ்கர், டி.பாஸ்கர், அன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Corona Vaccination Camp ,Avadi ,Uthukottai ,Ministers ,Ma Subramanian ,PM ,Nasser , Avadi, Uthukottai, Corona Vaccination Camp, Ministers Ma Subramanian, PM Nasser Participation
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!