×

நட்புறவை பாதுகாப்பது இருநாட்டுக்கும் நல்லது: சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சு

சிங்கப்பூர்: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி எல்லை கட்டுப்பாட்டு பகுதி பிரச்னையில் இந்தியா-சீனா இடையே கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் நடத்தப்பட்ட 15 சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில், பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு, கோக்ரா பகுதியில் இரு தரப்பும் படைகளை விலக்கி கொண்டன. இந்நிலையில், 2 நாட்கள் நடைபெறும் ஷாங்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்க சிங்கப்பூர் வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய், தென் சீனக் கடல் உள்ளிட்ட பிராந்திய பிரச்னைகளுக்கு அமைதியான வழியில் சுமூகமான தீர்வு காண வழிவகுக்கும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெய், ``அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் நட்புறவைப் காப்பது நல்லது. இது, இரு நாடுகளின் நலன்களையும் பூர்த்தி செய்யமுடியும்’’ என்று தெரிவித்தார்.

Tags : Defense Minister , Minister of Friendship, Chinese Defense
× RELATED தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான்: ராஜ்நாத் சிங்