பாஜ.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட முயற்சி எதிர்க்கட்சிகளை வளைக்க நட்டா, ராஜ்நாத் நியமனம்

புதுடெல்லி:  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், அடுத்த மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எம்பி., எம்எல்ஏ.க்கள் 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் பாஜ ஆதரவு பெற்ற வேட்பாளர் உறுதியாக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமை கட்சிகள், எதிர்க்கட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மாநில கட்சிகள், சுயேச்சை எம்பி.க்களுடன் தங்களின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வளைத்து போட, பாஜ. தேசிய தலைவர் ஜேபி.நட்டாவும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கலந்து ஆலோசிக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகியோரை காங்கிரஸ் தலைவர் சோனியா சமீபத்தில் தொடர்பு கொண்டார்.

மேலும், அனைத்து கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தனது கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ுன கார்கேவையும் நியமித்துள்ளார். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாவும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த விவாதிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 22 மாநில தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இவரின் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது. சோனியாவின் முயற்சிக்கு போட்டியாக மம்தா இவ்வாறு செய்திருப்பதால், காங்கிரசுக்கும், மம்தாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், சரத் பவாரை நேற்று சந்தித்து பேசினார்.

பிசுபிசுக்கும் மம்தா கூட்டம்

எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார். இதில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பங்ேகற்க மாட்டார் என்று இக்கட்சி தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் மேலும் தலைவர்களும் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பாக்கப்படுவதால், அவருடைய முயற்சி பிசுபிசுக்கும் என கருதப்படுகிறது.

Related Stories: