ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: தமிழக வீரர்கள் ஜீவன், ரூ.ராம் சாம்பியன்

பிராட்டிஸ்லாவா: ஸ்லோவாக்கியாவில் நடந்த ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்கள்  ஜீவன் நெடுஞ்செழியன், ரூ.ராம் பாலாஜி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். ஸ்லோவாக்கியாவில்  பிராட்டிஸ்லாவா  ஓபன் ஏடிபி சேலஞ்சர் பயண டென்னிஸ் போட்டியின் 3வது பதிப்பு நடந்தது.  களிமண் தரையில் நடந்த  போட்டியின்  இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பில்  தமிழக வீரர்கள் ஜீவன் நெடுஞ்செழியன், ரூ.ராம் பாலாஜி இணை களம் கண்டது.

அவர்களுடன் உக்ரைன்  இணை  விளாடிஸ்லாவ் மனாஃபோவ், ஒலெக் பிரிஹோட்கோ  ஆகியோர் மோதினர். டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை 7-8(8-6) என்ற புள்ளி கணக்கில் ஜீவன் இணை கைப்பற்றியது. தொடர்ந்து 2வது செட்டை யும் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜீவன் இணை எளிதில் வசப்படுத்தியது. அதனால்  ஜீவன் இணை 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்று  பிராட்டிஸ்லாவா ஓபன் ஏடிபி சேலஞ்சர் சாம்பியன் பட்டத்தை வென்றது. முதல்முறையாக பிராட்டிஸ்லாவா ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்கள் ஜீவன், ரூ.ராம் ஆகியோருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

Related Stories: