×

ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் முதல்நாளே 43 ஆயிரம் கோடி

மும்பை: உலகின்  அதிக பணம் புழங்கும் விளையாட்டுத் தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் போட்டித்  தொடர் விளங்குகிறது.  இந்தப் போட்டிகளை கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்து  வந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுனத்தின் ஒளிபரப்பு ஒப்பந்தம் இந்த ஆண்டுடன்  முடிகிறது. எனவே அடுத்த 5 ஆண்டுக்கான 410 ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் பெறுவதற்கான  இணையவழி ஏலம் நேற்று தொடங்கியது. இன்று முடிகிறது.

இந்த  ஏலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,  சோனி ஸ்போர்ட்ஸ், ஜி என்டர்டெயின்மென்ட்,  புதிதாக தொடங்கப்பட்டுள்ள வியாகாம் 18 போன்ற பெரிய நிறுவனங்கள்  பங்கேற்றுள்ளன. ஐபிஎல் போட்டியை முதல் 10 ஆண்டுகள்(2008-2016)  ஒளிபரப்பு செய்த சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம்  ரூ.8.200 கோடிக்கு உரிமம்  பெற்றது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு(2017-2022) ஒளிபரப்பு உரிமம் பெற்ற ஸ்டார்  போர்ட்ஸ் ரூ.16,347 கோடி கட்டணம் செலுத்தியது.
 
இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கான(2023-2027)   ஒளிபரப்பு வருவாய் ரூ.50ஆயிரம் கோடியை தாண்டும் என்று பிசிசிஐ எதிர்பார்த்துள்ளது. ஆனால்  அதற்கு மாறாக முதல்நாளே ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களில் பலத்த போட்டி  காரணமாக  ரூ.43ஆயிரம் கோடியை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.   கடைசி நாளான இந்தத் தொகை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏலத் தொகை பிசிசிஐ எதிர்பார்த்த 50 ஆயிரம்  கோடியை விட கூடுதலாக 10 ஆயிரம்  கோடிக்கு மேல்  கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏலத்தில்  யார், யார் எவ்வளவு ஏலம் கேட்டார்கள், அதிக தொகைக்கு ஏலம் கேட்ட நிறுவனம் எது  என்பதை இன்று  ஏலம் முடிந்த பிறகுதான் பிசிசிஐ அறிவிக்கும்.

Tags : IPL , IPL broadcast auction,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி