தேவகோட்டையில் தவற விட்ட 16 1/2 பவுன் நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு: இப்ராகிம் சாதிக்

தேவகோட்டை: தேவகோட்டையில் திருச்சி- ராமேஸ்வரம் மாநில  நெடுஞ்சாலையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த  ஜூன் 10ம் தேதி திருமண நிகழ்விற்கு சென்று விட்டு தனக்கு சொந்தமான 2 தங்க  செயின்கள், 2 தங்க வளையல்கள், மோதிரங்கள் என 16 1/2 பவுன் நகைகளை கழற்றி  டப்பாவிற்குள் வைத்துள்ளார். பின்னர் அதனை எங்கு வைத்தோம் என மறந்தபடி  தேடியுள்ளா்.

இந்நிலையில் நகைக்கடையின் மேல் இருக்கும் பிரவுசிங் சென்டரில்  அனைத்து நகைகளும் பத்திரமாக இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு  சென்டரின் உரிமையாளர் இப்ராகிம், தங்க நகைகளை பார்த்து பதட்டமடைந்துள்ளார். தொடர்ந்து இதுபற்றி அவர் பின்புறம் செல்போன் கடை நடத்தி வரும்  சாதிக்கிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இருவரும் அளித்த தகவலின் பேரில்  தேவகோட்டை டவுன் போலீசார் நேரில் வந்து நகைகளை பெற்று கொண்டனர்.

பின்னர்  போலீசார் விசாரித்து நகைக்கடை பெண்மணி தெரிவித்த அடையாளத்தை உறுதி செய்து  அவரிடம் நேற்று காலையில் நகைகளை ஒப்படைத்தனர். பெண் தவற விட்ட நகைகளை  ஒப்படைத்த இப்ராகிம், சாதிக்கின் நேர்மையை போலீசார், பொதுமக்கள்  பாராட்டினர்.

Related Stories: