×

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக உள்ளதாக ரன்தீப் சுர்ஜேவாலா தகவல்..!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் சில தலைவர்களையும் செயல்பாட்டாளர்களையும் சந்தித்துள்ளார். அவர்களில் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் இவருக்கும் லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் இருந்ததால் வீட்டிலேயே சோனியாகாந்தி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா  வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி இன்று கொரோனா தொடர்பான பிரச்சனைகளால் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருக்கிறது, மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.


Tags : Congress ,Sonia Gandhi ,Randeep Surjewala , Congress leader Sonia Gandhi admitted to hospital: Randeep Surjewala reports that his health is stable ..!
× RELATED விரைவில் சட்டப்பேரவை தேர்தல்...