×

தோனிமடுவு பகுதியை பாமக எம்எல்ஏ ஆய்வு: முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்

மேட்டூர்: மேட்டூர் சட்டமன்ற தொகுதி கொளத்தூர் ஒன்றியத்திற்கு மிக அருகில் உள்ள தோனிமடுவில், தடுப்பணை கட்டி நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தினால், மேட்டூர், அந்தியூர் மற்றும் பவானி சட்டமன்ற தொகுதியில் உள்ள சுமார் 68,978 ஹெக்டேர் நிலம் பாசன வசதியை பெறும். இந்த திட்டம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், இதுகுறித்து மேட்டூர் சதாசிவம் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர், ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருப்பின், திட்டம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியதுடன், ஆய்வுப்பணிக்காக ரூ. 5 லட்சம் ஒதுக்கீடும் செய்தார். இந்நிலையில் நேற்று, பாமக எம்எல்ஏ சதாசிவம், தோனிமடுவு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அவருடன் மேட்டூர் மற்றும் சென்னம்பட்டி வனத்துறை அதிகாரிகள், கொளத்தூர் பிடிஓ., தோனிமடுவு பாசன விவசாய தொழிலாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சென்றனர். தேனிமடுவை பார்வையிட்ட பிறகு சதாசிவம் எம்எல்ஏ., செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேனிமடுவு திட்டத்தின் ஆய்வு பணிக்காக, ரூ. 5 லட்சம் ஒதுக்கிய முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே, தோனிமடுவு திட்டத்தின் ஆய்வு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட முதல்வர், இந்த திட்டத்தை நிறைவேற்றி தருவார் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது, என்றார்.


Tags : Bamaka ,Thonimaduvu ,Principal , Pamaka MLA inspects Tonimadu area: thanked the first
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...