×

ஆயிரம் காளியம்மன் கோயில் பூஜை விழா: சிறப்பாக முடிந்ததற்கு பொதுமக்கள் பாராட்டு

காரைக்கால்: காரைக்காலை அடுத்த திருப்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஆயிரம் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பேழையிலிருந்து அம்மன் வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அபூர்வ நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக சிறப்பாக நடைபெற்றது. விழா தொடங்கிய முதல் முடிவுறும் வரை சிறு அசம்பாவிதங்கள் கூட நிகழாமல் நடந்து முடிந்துள்ளது.

காவல் துறை, தீயணைப்புத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை ஆகியவை தங்களது பணிகளை மிகவும் சிறப்புடன் செயல்பட்டனர். ஐந்து வருடங்களுக்கு பிறகு கொரோனா சூழ்நிலை ஆகியவை கடந்து விழா நடைபெறுவதால் நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் மிகவும் நேர்த்தியுடன் ஆயிரம் காளியம்மன் பூஜை நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்.

எம்எல்ஏ நாகதியாகராஜனின் இந்த செயல்பாட்டை பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை மீண்டும் பேழைக்குள் ஆயிரம் காளியம்மன் ஐக்கியமானார். பின்னர் நாகதியாகராஜன் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுடன் விழாவால் சேர்ந்த குப்பைகள் மற்றும் நெகிழிகளை சாலை ஓரங்கள் மற்றும் பொது பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Thousand Kaliamman Temple Pooja: Public Praise for Excellent Completion
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை