×

சித்தூர் மாவட்டத்தில் காலாபாடு ரூ. 70 இருந்து ரூ. 90 வரை விற்பனை விளைச்சல் குறைவால் மாங்காய் விலை கடும் உயர்வு

* ஒடிசா,  மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ஏற்றுமதி குறைவு
* ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரிக்கை

சித்தூர்: சித்தூர் மாவட்டத்தில் விளைச்சல் குறைவால் மாங்காய் விலை கடும் உயர்ந்துள்ளது. காலாபாடு ரூ.70 இருந்து ரூ. 90 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது. ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவு கரும்பு, விவசாயம் செய்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக  சாகுபடி செய்வது மாங்காய். மாவட்டம் முழுவதும் 7 லட்சம் ஏக்கரில் மாங்காய் விவசாயம் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் இறக்குமதி செய்து பயனடைந்து வருகின்றனர். ஆனால், எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மாங்காய் விளைச்சல் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்தாண்டு போதிய மழை பெய்தும், இந்தாண்டு மாங்காய் விளைச்சல் மிகவும் குறைந்திருப்பது விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டு ஒரு கிலோ பெங்களூர் மாங்காய் விற்பனை கிலோ ரூ. 5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்தாண்டு  பெங்களூர் மாங்காய் விளைச்சல் மிகவும் குறைவாக இருப்பதால் கிலோ ரூ. 25 முதல் ரூ. 35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சித்தூர் மாவட்டத்தில் பேர்நிஷா(பங்கனப்பள்ளி) மாங்காய் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு கிலோ ரூ. 30க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், காலாபாடு மாங்காய் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாங்காய்கள் தற்போது ரூ. 70 முதல் ரூ. 90 வரை விற்பனை செய்யப்படுகிறது. சித்தூர் மாங்காய் மார்கெட்டிற்கு கடந்தாண்டு நாளொன்றுக்கு 20 லாரிகள்  முதல் 50 லாரிகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேலும் ஒடிசா,  மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்குவங்கம், மத்தியபிரதேஷ், உத்தரபிரதேசம் ஆகிய  மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

ஆனால், இந்தாண்டு  மார்க்கெட்டிற்கு நாளொன்றுக்கு 2 லாரிகள் முதல் 5 லாரிகள் வரை மட்டுமே  ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், மார்க்கெட்டில் வியாபாரம்  செய்யும் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு பல்வேறு நோய் தாக்குதல்  ஏற்பட்டதால் எதிர்பார்த்த அளவிற்கு விவசாயிகளுக்கு கை கொடுக்காது பெரும்  ஏமாற்றத்தை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது. ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வருகிறோம். ஆனால், ஒவ்வோராண்டும் ஒரு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை லாபம் கிடைத்து வந்தது.

ஆனால், இந்தாண்டு ஏக்கருக்கு ரூ. 1.10 லட்சத்துக்கு செலவு செய்தும் ஒரு ரூபாய் கூட லாபம் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாங்காய் செடிகளுக்கு நான்கு முறை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. இருப்பினும், மாங்காய்க்கு பல்வேறு நோய்கள் தாக்கியதால் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது. மாநில அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

அரசு பூச்சிக்கொல்லி மருந்துகள், மருந்து தெளிக்கும் இயந்திரங்கள், சொட்டு நீர்பாசன வசதிக்கு பயன்படுத்தும் இயந்திரங்கள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மாநில அரசு விவசாயிகளுக்கு உதவிகள் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : Callapadu ,Chittoor District , In Chittoor district, the period is Rs. 70 to Rs. Mango prices soar due to lower sales yields up to 90
× RELATED தினந்தோறும் வெப்பம் அதிகரிப்பு...