லாலுவுக்கு 75வது பிறந்த நாள்

பாட்னா:  பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் 75வது பிறந்த நாளை ராஷ்டிரிய ஜனதா தள தொண்டர்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நிறுவன  தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் 75வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்தாலும், முக்கிய பிரமுர்கள் பலர் லாலுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், நீண்ட ஆண்டுகளுக்கு பின் பிறந்தநாளை முன்னிட்டு லாலு தனது கட்சி அலுவலகத்துக்கு சென்று தொண்டர்களை மகிழ்ச்சியடைய செய்தார். அங்கு 75 கிலோ எடைaயில் செய்யப்பட்டு இருந்த லட்டுவை வெட்டி  தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது தொண்டர்கள் 75 கூடைகளில் பீகாரின் பாரம்பரிய இனிப்பு வகையான காஜாவை எடுத்து வந்திருந்தனர்.

Related Stories: