தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் 3,000 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடக்கி மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதுவரை 28 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ள நிலையில் முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதத்தினருக்கும் அதிகமானவா்களுக்கு செலுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. அதில் பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வர் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

Related Stories: