கோத்தகிரி அருகே டாஸ்மாக் பார்களில் போலீசார் அதிரடி சோதனை: மதுவை பதுக்கி விற்ற 6 ஊழியர் கைது

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு, எஸ்.கைக்காட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாலை நேரம் மற்றும் இரவு முழுவதும் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் கட்டபெட்டு மற்றும் எஸ்.கைக்காட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கட்டபெட்டுவில் 104 மதுபாட்டில்கள், ரூ.12,000 ரொக்கம் மற்றும் எஸ்.கைக்காட்டி பகுதியில் 25 மதுபாட்டில்கள்  ரூ.17,000 ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். பார் ஊழியர்கள் 6  பேரை தனிப்படை போலீசார் பிடித்து கோத்தகிரி போலீசில்  ஒப்படைத்தனர்.  கோத்தகிரி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Related Stories: