அதிமுகவுடன் அமமுக இணைய வாய்ப்பில்லை: சிவகாசியில் டிடிவி.தினகரன் பேச்சு

சிவகாசி: அதிமுகவுடன் அமமுக இணைய வாய்ப்பில்லை என சிவகாசியில் டிடிவி.தினகரன் பேசினார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்  ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது:

தொண்டர்கள் இருக்கும்வரை நான் தோற்க மாட்டேன். இறப்பது ஒருமுறை.  வாழ்வது ஒருமுறை. என்ன வருகிறது என பார்த்து விடலாம்.

யாரை பார்த்தும்  எனக்கு பயமில்லை. ஆட்சி என்கிற பெயரில் கம்பெனி நடத்தியதால், எடப்பாடி  ஆட்சியை இழந்தார். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வரும்வரை  ஓயமாட்டேன். அதிமுகவுடன் நாங்கள் இணைய வாய்ப்பே இல்லை. அதிமுவை  மீட்டெடுப்பதே எங்களது லட்சியம். வெற்றி தோல்வியை வைத்து அரசியல் கட்சியை எடை  போடக்கூடாது. ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்திப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: