தேசிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும்: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் அறம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் அளித்த பேட்டி:  இந்தி - சமஸ்கிருத திணிப்பு, இந்துத்துவ ஒற்றை பண்பாட்டை திணித்தல், சாதி அடிப்படையிலான பரம்பரை தொழிலை திணிக்கும் முயற்சி போன்ற நோக்கங்கள், தேசிய கல்விக் கொள்கையில் மறைமுக நோக்கங்களாக உள்ளன. இது நாட்டின் பன்முகத் தன்மைக்கும், ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாகும்.

எனவே, இக்கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தில் இதர வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறுவதை தடுத்துவிடும். எனவே நாட்டு மக்களின் நலவாழ்விற்கு எதிரான இத்தகைய ஆபத்தான முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

பெண்களின் சட்ட ரீதியான திருமண வயதை 21 ஆக உயர்த்திட ஒன்றிய அரசு முயல்கிறது. இது பல்வேறு மோசமான சமூகப் பொருளாதார மற்றும் மருத்துவ ரீதியான பிரச்னைகளை உருவாக்கிவிடும். புதிய வகை கொரோனா தொற்றும் அதிகரிக்கும் வேளையில், கொரோனா தடுப்பூசி 1.6 கோடி பேர் போடாமல் தமிழ்நாட்டில் இருப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: