×

41 மருந்துகள் தரமற்றவை: தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

டெல்லி: மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 41 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அவற்றில் பெரும்பாலானவை இமாசலப் பிரதேசம், அரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. இதுகுறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து -மாத்திரைகளும் ஒன்றிய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதேபோல போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,233 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : 41 Drugs are substandard: Quality Control Board Information
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு...