×

ரயில்வே வாரிய தேர்வுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தமிழகத்தில் இருந்து ரயில்கள் புறப்படும் இடங்கள் எவை?

புதுடெல்லி: இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வருகிறது. வழக்கமாக தேர்வு மையங்கள் வெவ்வேறு நகரங்கள், மாநிலங்களில் இடம்பெறும். இதனால் விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே தயாராக வேண்டி வரும். இதையொட்டி ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்து தரப்படும். அந்த வகையில் நடப்பு வாரத்தின் இறுதி நாட்களில் ஆர்ஆர்பி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வை முன்னிட்டு புவனேஸ்வர் - தாம்பரம் இடையே கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலம் ஒரு சிறப்பு ரயிலை இயக்குகிறது. தென்னக ரயில்வே எல்லைக்கு உட்பட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1. திருநெல்வேலி - விஸ்வேசுவராயா பெங்களூர்
வண்டி எண் 06046 திருநெல்வேலியில் இருந்து ஜூன் 13ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு, ஜூன் 14ம் தேதி பகல் 12.30க்கு விஸ்வேசுவராயா பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும். மறுமார்கத்தில் வண்டி எண் 06045 விஸ்வேசுவராயா பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 17ம் தேதி மாலை 6:30க்கு புறப்பட்டு, ஜூன் 18ம் தேதி காலை 10மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையம் வந்து சேரும். தமிழகத்தில் இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், மற்றும் சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2. தூத்துக்குடி - கர்னூல் சிட்டி
வண்டி எண் 06047 தூத்துக்குடியில் இருந்து ஜூன் 13ம் தேதி பகல் 12 மணிக்கு புறப்பட்டு, ஜூன் 14ம் தேதி காலை 10.15க்கு கர்னூல் சிட்டி ரயில் நிலையம் சென்றடையும். மறுமார்கத்தில் வண்டி எண் 06048 கர்னூல் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 17ம் தேதி மாலை 7.30க்கு புறப்பட்டு, ஜூன் 18ம் தேதி பிற்பகல் 2மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் வந்து சேரும். தமிழகத்தில் இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

3. கொல்லம் - திருச்சி
வண்டி எண் 06056 கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 13ம் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, ஜூன் 14ம் தேதி காலை 7:40க்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும். மறுமார்கத்தில் வண்டி எண் 06055 திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 17ம் தேதி இரவு 11மணிக்கு புறப்பட்டு, ஜூன் 18ம் தேதி காலை 9.15மணிக்கு கொல்லம் ரயில் நிலையம் வந்து சேரும். தமிழகத்தில் இந்த ரயில் நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

4. திருவனந்தபுரம் - மைசூர்
வண்டி எண் 06050 திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 13ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு, ஜூன் 14ம் தேதி இரவு 10.00க்கு மைசூர் ரயில் நிலையம் சென்றடையும். மறுமார்கத்தில் வண்டி எண் 06049 மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 17ம் தேதி இரவு 11.55க்கு புறப்பட்டு, ஜூன் 18ம் தேதி இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையம் வந்து சேரும். தமிழகத்தில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

5. திருவனந்தபுரம் - கோல்ஹாபூர்
வண்டி எண் 06052 திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 13ம் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு, ஜூன் 15ம் தேதி இரவு 9.25க்கு கோல்ஹாபூர் ரயில் நிலையம் சென்றடையும். மறுமார்கத்தில் வண்டி எண் 06051 கோல்ஹாபூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 17ம் தேதி இரவு 10.30க்கு புறப்பட்டு, ஜூன் 19ம் தேதி காலை 6:40 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையம் வந்து சேரும். தமிழகத்தில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

6. திருப்பதி - சேலம் (இரண்டு ஜோடி ரயில்கள்)
வண்டி எண் 07675 திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 11ம் தேதி காலை 6.45க்கு புறப்பட்டு அன்றைய தினம் பகல் 12 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்து சேரும். மறுமார்கத்தில் வண்டி எண் 07676 சேலம் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 11ம் தேதி பகல் 12.30க்கு புறப்பட்டு அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருப்பதி ரயில் நிலையம் சென்றடையும். வண்டி எண் 07675 திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 12ம் தேதி இரவு 7.30க்கு புறப்பட்டு ஜூன் 13ம் தேதி 1.30 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்து சேரும்.

மறுமார்கத்தில் வண்டி எண் 07676 சேலம் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 13ம் தேதி அதிகாலை 3.30க்கு புறப்பட்டு அன்றைய தினம் காலை 8.55 மணிக்கு திருப்பதி ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில்கள் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

Tags : Tamil Nadu , Special trains for Railway Board Examination: What are the departure points of trains from Tamil Nadu?
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...