குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி கடிதம்..!

கொல்கத்தா: தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூலை 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21ம் தேதி எண்ணப்பட உள்ளன.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர் தேர்வில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளன. இந்நிலையில் மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால்,

பினராயி விஜயன், சந்திரசேகர ராவ், உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில்; ஜூன் 15ம் தேதி டெல்லியில் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய அரசின் பல்வேறு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூறி வைக்கப்படுகிறார்கள். குடியரசு தலைவர் தேர்தலில் வலுவான பங்களிப்பை அளிக்க வேண்டும். குடியரசு தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: