பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 13ம் தேதி மின்சாரம் நிறுத்தம்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 13ம் தேதி மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் வரும் 13ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், ஐ.டி காரிடர், சோழிங்கநல்லூர், அடையாறு, சைதாப்பேட்டை. கிண்டி, போரூர், கே.கே நகர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மயிலாப்பூர் பகுதி: சி.பி. ராமசாமி ரோடு (எண் 78 முதல் 86 வரை), தாம்பரம் பகுதி:  கடப்பேரி டி.என்.எச்.பி காலனி, மகாலட்சுமி நகர் புதுதாங்கல் சிடிஓ காலனி, தங்கமணி நகர், பாலாஜி நகர் மாடம்பாக்கம் விஜிபி சீனிவாச நகர் முழுவதும், சரவணா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ஐ.டி காரிடர், சோழிங்கநல்லூர் பகுதி: கே.கே சாலை, வில்லேஜ் நெடுஞ்சாலை, டிஎன்எச்பி சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடையார், சைதப்பேட்டை பகுதி: எல்டிஜி ரோடு, ஸ்ரீநகர் காலனி ஒரு பகுதி, பிஷ்சப் காலனி  மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்,

கிண்டி : கிண்டி பகுதி, ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம்,  வாணுவம்பேட்டை, டி.ஜி நகர், புழுதிவாக்கம் பகுதி, நங்கநல்லூர், மடிப்பாக்கம்,  மூவரசம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். போரூர் பகுதி : கோவூர்  குமரன் நகர் முழுவதும், மணிகண்டன் நகர், ரெட்டி தெரு திருமுடிவாக்கம் எருமையூர், கிருஷேர் பகுதி, கிஷ்கிந்தா மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். கே.கே.நகர் : வடபழனி, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், சாலிக்கிராமம், அசோக்நகர், அழகிரிநகர், கே.கே.நகர் பகுதி, எம்ஜிஆர் நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

Related Stories: