பேட்டிங்-பவுலிங் இரண்டிலும் ஜொலிப்பார்; டி 20 தொடரில் அஸ்வினை சேருங்கப்பா... முகமது கைப் சொல்கிறார்

புதுடெல்லி: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதற்கு கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாளவில்லை என்றும் குறிப்பாக ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் மாஜி வீரர் முகமது கைப் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் பலமிக்கவைதான். ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சில் ஒரு தவறு இருக்கிறது. சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகிய மூன்று பேரும் லெக் ஸ்பின்னர்களாக இருப்பதுதான் தவறு.

மூன்று லெக் ஸ்பின்னர்களை வைத்து, எங்கேயும் சிறப்பாக விளையாட முடியாது. அணியில் லெக், ஆஃப் ஸ்பின்னர்கள் இருந்தால்தான், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியும். அஸ்வின் அணியில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. 2021 உலகக் கோப்பையில் இடம் பிடித்த அவர் தற்போது நல்ல பார்மில் உள்ளார். 3 லெக் ஸ்பின்னர்களில் ஒருவரை நீக்கிவிட்டு, ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை சேர்த்தால் மிகுந்த பலன் அளிக்கும். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் அஸ்வினால் ஜொலிக்கமுடியும்’’ என்றார்.

Related Stories: