இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். தொடர்ச்சியான ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம்; ஆனால் சனாதன தர்மமும் அதையே கூறுகிறது. சோமநாதர் கோயில் சொத்துகளை அழித்து காந்தகர், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவில் தகர்க்கப்பட்டது; இதில் இருந்தே சனாதன தர்ம வலிமையை அறியலாம் என கூறினார். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

Related Stories: