புதிதாக திறக்கப்படவில்லை தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் கடைகள் மூடல்: கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டுள்ளதாகவும், புதிதாக கடைகள் திறக்கப்படவில்லை எனவும் தமிழக  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  தெரிவித்தார். கோவையில், அமைச்சர்  செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:  கடந்த ஓராண்டு காலத்தில்  தமிழகத்தில் 45 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. புதிய கடைகள் திறக்கவில்லை. சில கடைகள் இடமாற்றம் செய்யப்படுகிறது. சேப்பாக்கம்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மூலம் கோவை மாவட்ட மக்களின்  குறைகளை தீர்க்கும் கோவை 24×7 சேவையில் 8,407 அழைப்புகள் வரப்பட்ட நிலையில்  4,637 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: