×

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது பாடகி சுசித்ரா அவதூறு புகார்

சென்னை: தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சினிமா பாடகி சுசித்ரா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பாடசி சுசித்ரா குறித்து சில கருத்துகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாடகி சுசித்ரா நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு போன் செய்து பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதற்கிடையே பாடகி சுசித்ரா சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தன் மீது நடிகர் பயில்வான் ரங்கநாதன் எந்தவித ஆதாரமுமின்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். என் மீது வேண்டுமென்றே அவதூறாக கருத்துகளை சுமத்தி என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். இதனால் எனக்கு பாடல் பாடும் வாய்ப்பு குறைந்து வருகிறது. எனவே, என்னை பற்றி உண்மைக்கு புறம்பாக அவதூறான கருத்துகளை தொடர்ந்து பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Suchitra ,Payilvan Ranganathan ,Police Commissioner's Office , Singer Suchitra has lodged a defamation suit against actor Payilvan Ranganathan at the Police Commissioner's Office
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு...